ஓய்வூதியத் திட்டம்
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல்,
- தனியார் பள்ளிக் கல்லூரி மற்றும் மருத்துவ மனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருதல்.
கல்வி
- மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்களில் உள்ளதை வினாவாக தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்துதல்.
- 20 மாணவ மாணவியருக்கு ஓர் ஆசிரியர் என நியமனம் செய்தல்
வேலை வாய்ப்பு
- அரசு தேர்வுத்துறையில் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும் ( TNPSC Group IV ) திருத்தம் செய்தல்
- 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தல்
- அரசு அலுவலகங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்யும் ஊழியர்களை நிரந்தரமாக்குதல்
மருத்துவம்
- மக்கள் தேவைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற, சிகிச்சைக்கான ஆலோசனை பெற தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் அரசு ஏற்றுக் கொள்ளுதல்
இட ஓதுக்கீடு
- அனைத்து மத ஜாதியினரை பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடஓதுக்கீட்டு அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குதல்
தொழிலாளர் நலன் (வாரியம்)
- தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்களுக்கு பயன்பாட்டிற்காக, தொழிலாளர் நல வாரிய வங்கிகள் தொடங்கப்பட்டு இந்த வங்கிகளில் (80 G) பொறப்பட்ட அமைப்புகள் வங்கிக் கணக்குகள் வைக்க வழிவகைகள் செய்திடுதல்,
- தொழில் சார்ந்த ஜாதியினரை அரசு தேவைக்கேற்க அரசு வேலை வாய்ப்பு வழங்கிடுதல்
- தொழிலாளர். கடன் சுமைகளிலிருந்து விடுபட வாரிய வங்கியின் மூலம் தினத் தவணை கடன் வழங்குதல்
விவசாயம்
- விவசாயம் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் விவசாயம் செய்த தானியங்கள் மற்றும் அன்றாட காய், கனிகளை அரசே கொள் முதல் செய்வது மற்றும் அதற்கான தானிய சேமிப்புக் கிடங்கு , காய், கனிகளை குளிரூட்டும் வசதிகளை செய்து கொடுத்தல்.
- விவசாயிகளின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கிடுதல்
மின்சாரம்
- இலவச மின்சாரம் ரத்து செய்து, குறைந்த கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, மொத்த யூனிட்டுக்கும் ஒரே கட்டணம் வசுல் செய்தல்
ஆடம்பர பொருட்களின் சலுகை
- தங்க நகைகள் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1000/- மானியமாக அரசு வழங்குதல்
- மேலும் கூடுதலாக வாங்கும் நகைகளுக்கு அதற்கான கூடுதல் தொகை வழங்குதல்.
நிதிநிலை
- தமிழக அரசு பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துவது.
- நாம் கட்டக்கூடிய வட்டித் தொகையினை மக்கள் சேவைகளுக்கு பயன்படுத்தப்படுத்துதல்
குறிப்பு
- இதில் கேட்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண் தங்களின் பயன்பாட்டிற்கு
உதவக் கூடியவையாக இருக்கும் .
- தாங்கள் வசிக்கும் பகுதி பொறுப்பாளராக செயல்பட விருப்பம் இருப்பின் தாங்கள் தெரிவிக்கலாம்.
- இதில் வரும் நன்கொடைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
- வாக்காளருக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை தவிர்ப்பதற்காக, மானியமாக கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுளளது.
சுகாதாரமான குடிநீர்
- இச்சங்கம் ஆதரவு பெற்ற அரசியல் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 50 சதவீத மானியத்தில் வாட்டர் பில்டர் பதிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு கிருஷ்ணா சமூக சேவா சங்கம் வழங்கும்
நல திட்ட ங்கள்
- இலவச மருத்துவ முகாம் அமைத்து அதன் மூலம் தங்களின் நோய்களுக்கான சிகிச்சை செய்தல்
- மாணவ, மாணவிகளுக்க காலை, மாலை வேலையில் இலவச கல்விக் கற்றுக் கொடுத்தல்
- மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்தல்
மேலும் பல உதவித்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும்