Tamil Nadu Krishna Social Service Society (TNKSSS)

தமிழ்நாடு கிருஷ்ணா சமூக சேவா சங்கம்

Registration No. 14 / 2014

Tamil Nadu Krishna Social Service Society (TNKSSS)

தமிழ்நாடு கிருஷ்ணா சமூக சேவா சங்கம்

Registration No. 14 / 2014

Registration

கீழே கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  அரசியல் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதியத் திட்டம் 

  1. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், 
  2. தனியார் பள்ளிக் கல்லூரி மற்றும் மருத்துவ மனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருதல். 

கல்வி  

  1. மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு  பாடத்திட்டங்களில் உள்ளதை வினாவாக  தேர்வு  நடத்த மத்திய அரசை வலியுறுத்துதல்
  2. 20 மாணவ மாணவியருக்கு ஓர் ஆசிரியர் என நியமனம் செய்தல் 

வேலை வாய்ப்பு 

  1. அரசு தேர்வுத்துறையில் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும்     ( TNPSC Group  IV )  திருத்தம்  செய்தல் 
  2. 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்தல் 
  3. அரசு அலுவலகங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்யும் ஊழியர்களை நிரந்தரமாக்குதல்

மருத்துவம் 

  1. மக்கள் தேவைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனை பெற, சிகிச்சைக்கான ஆலோசனை பெற தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம் அரசு ஏற்றுக் கொள்ளுதல்  

இட ஓதுக்கீடு 

  1. அனைத்து மத ஜாதியினரை பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடஓதுக்கீட்டு அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குதல் 

 

 

 

தொழிலாளர் நலன் (வாரியம்) 

  1. தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டவர்களுக்கு பயன்பாட்டிற்காக, தொழிலாளர் நல வாரிய வங்கிகள் தொடங்கப்பட்டு இந்த வங்கிகளில் (80 G) பொறப்பட்ட அமைப்புகள் வங்கிக் கணக்குகள் வைக்க வழிவகைகள் செய்திடுதல், 
  2. தொழில் சார்ந்த ஜாதியினரை அரசு தேவைக்கேற்க  அரசு வேலை வாய்ப்பு வழங்கிடுதல் 
  3.  தொழிலாளர். கடன் சுமைகளிலிருந்து விடுபட வாரிய வங்கியின் மூலம் தினத் தவணை கடன் வழங்குதல் 

விவசாயம் 

  1. விவசாயம் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் விவசாயம் செய்த தானியங்கள் மற்றும் அன்றாட காய், கனிகளை அரசே கொள் முதல் செய்வது மற்றும் அதற்கான தானிய சேமிப்புக் கிடங்கு , காய், கனிகளை குளிரூட்டும் வசதிகளை செய்து கொடுத்தல் 
  2. விவசாயிகளின்  குடும்ப நிகழ்ச்சிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கிடுதல் 

மின்சாரம் 

  1. இலவச  மின்சாரம் ரத்து செய்து, குறைந்த கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, மொத்த யூனிட்டுக்கும் ஒரே கட்டணம் வசுல் செய்தல் 

ஆடம்பர பொருட்களின் சலுகை 

  1. தங்க நகைகள்  கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1000/- மானியமாக அரசு வழங்குதல் 
  1. மேலும் கூடுதலாக வாங்கும் நகைகளுக்கு அதற்கான கூடுதல் தொகை வழங்குதல். 

நிதிநிலை 

  1. தமிழக அரசு பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துவது. 
  1. நாம் கட்டக்கூடிய வட்டித் தொகையினை மக்கள் சேவைகளுக்கு பயன்படுத்தப்படுத்துதல் 
     

 

குறிப்பு 

  1. இதில் கேட்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண் தங்களின் பயன்பாட்டிற்கு   

      உதவக் கூடியவையாக இருக்கும் . 

  1.  தாங்கள் வசிக்கும் பகுதி பொறுப்பாளராக செயல்பட விருப்பம் இருப்பின் தாங்கள் தெரிவிக்கலாம். 
  1.  இதில் வரும் நன்கொடைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். 
  1. வாக்காளருக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை தவிர்ப்பதற்காக, மானியமாக கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுளளது. 

 

 

சுகாதாரமான குடிநீர் 

 

  1. இச்சங்கம் ஆதரவு பெற்ற அரசியல் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 50 சதவீத மானியத்தில் வாட்டர் பில்டர் பதிவு செய்யப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு கிருஷ்ணா சமூக சேவா சங்கம் வழங்கும்

 

 

நல திட்ட ங்கள் 

  1. இலவச மருத்துவ முகாம் அமைத்து அதன் மூலம் தங்களின் நோய்களுக்கான சிகிச்சை செய்தல் 
  1. மாணவ, மாணவிகளுக்க காலை, மாலை வேலையில் இலவச கல்விக் கற்றுக் கொடுத்தல் 
  1. மழை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் அளித்தல் 

மேலும் பல உதவித்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் 

Registration Form

Translate »